1 நாம் இன்று இப்படி இருக்க காரணம் நமது கடந்த கால செயல்கள். நமது எதிர்காலம் எப்படி அமையும் என்பது நமது இன்றைய செயல்களை பொறுத்ததே. 
2 தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்றவர்  எல்லா மனதையும் அடக்க முடியும்.  
3  நீங்கள் ஒருவரது உண்மையான குணத்தை அறிய விரும்பினால் அவரது மகத்தான காரியங்களை பார்த்து முடிவுக்கு வராதீர்கள். முட்டாள்கள் கூட சில சமயம் மகத்தான மனிதனாக மாற முடியும். ஒருவன் மிக மிக சாதாரண செயல்களை செய்யும் போது கூர்ந்து கவனியுங்கள். அவையே அவனது உண்மையான குணத்தை தெரிவிப்பவை. எந்த சூழ்நிலையிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாக இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
4  எண்ணங்களுக்கு ஏற்ப நாம் உருவாகிறோம் எனவே என்ன நினைக்கிறாய் என்பதில் எச்சரிகையாக இரு. 
5 தொடர்ந்து நற்செயல்களை செய்யுங்கள். தீய விஷயங்களை அடக்க இது ஒன்று தான் வழி. திருந்தவே முடியாதவன் என்று பிறரை ஒரு போதும் குறை கூறாதீர்கள். ஏனெனில் பல பழக்கங்களின் மொத்தமான ஒரு குணத்தையே அவன் வெளிபடுத்துகிறான். இதனை புதிய தொடர்ந்த நல்ல பழக்கங்களால் மாற்ற முடியும். 
 6 ஒருவன் தீய செயல்களை செய்யும்  பொது அவன் தன் மனதை ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலைக்கு கொண்டு வருகிறான். அப்போது அதே அதிர்வு நிலையில் வான வெளியில் மிதந்து கொண்டிருக்கும் எண்ண அலைகளெல்லாம் அவனது மனதில் நுழைய முயல்கின்றன. இதனால் தான் தீமை புரிகிறவன் மென்மேலும் தீமை புரிகிறான் மற்றும் நன்மை செய்பவன் வான வெளியில் உள்ள நல்ல அலைகளுக்காக தன்னை திறந்து வைக்கிறான். அவனது நற்செயல்களும் உறுதி பெறுகின்றன.
7 நாம் தீயவனாக இல்லாமல் பிறரிடம் தீமை காண முடியாது.
8 தனக்கு தானே கட்டுப்பாடு உள்ளவன் மீது வெளியில் உள்ள எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது.
9 உண்மையிலே நான் என்னை அடக்கினால் துயரம் ஒரு போதும் வராது.
 10 தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளை போல உன் மீது பாய தயாராக இருக்கின்றன. அதே போல உன் நல்ல எண்ணங்களும் செயல்களும் நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாக பாதுகாக்க தயாராக உள்ளன.
11 யார் ஒருவனுக்கு இயற்கையிலேயே கூரிய அறிவாற்றல் இல்லையோ அவனுக்கு தான் பெருமளவில் உதவிகள் கொடுக்கப்பட   வேண்டும்.  ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவு இல்லாதவர்கள் ஆகிய இவர்களே உனது தெய்வமாக விளங்கட்டும்.   
12 ஒழுக்கமாக இருப்பது மட்டுமே நமது லட்சியத்தின்  முடிவல்ல. மாறாக அது ஓர் லட்சியத்தை அடைய செய்யும் பாதையாக மட்டும் தான் இருக்கிறது. 
13 மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிக குறைந்த அளவு உழைப்பும் கூட நமக்குள் இருக்கும் சக்தியை தட்டி எழுப்புகிறது. மற்றவர்களின் நன்மைக்காக சிறிதளவு நினைப்பதும் கூட சிங்கத்திற்கு சமமான ஆற்றலை நமது இதயத்திற்கு அளிக்கிறது.  
14 மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி; அதிர்ஷ்ட தேவதை உனக்கு அருள் புரியட்டும் (அ) அருள் புரியாமல் போகட்டும்; உன் உடல் இன்றே வீழ்ந்து போகட்டும். நீ மட்டும் உன்னை "உண்மை" எனும் பாதையிலிருந்து அணுவளவேனும் தவறி செல்லாமல் இரு.  
15 லட்சக்கணக்கான மக்கள் பசியாலும், அறியாமையாலும் உழன்று கொண்டிருக்கும் போது, அவர்களது செலவில் கல்வி கற்று அவர்களை சிறிதும் சிந்திக்காத ஒவ்வொரு மனிதனையும் நான் துரோகி என்றே சொல்வேன்.
16 நாம் தோல்வி அடையும் பொது பிறரை குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்த கணமே நமது தோல்விக்கு இவர் தான் காரணம் என்று ஒருவரை காட்டிவிடுகிறோம். நாம் யாரும் சொந்த குற்றங்களையும், பலவீனங்களையும் ஒப்புகொள்வதில்லை . உங்கள் தவறுக்கு பிறரை பழி கூறாதீர்கள், சொந்த காலிலேயே நில்லுங்கள், முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்த்துகளுடன் 
உங்கள் நண்பன் மோகன்
உங்கள் நண்பன் மோகன்
 

