உலக விஷயங்கள் அனைத்தையும் அறிந்திருக்கும் 
கணிப்பொறி   கூட, குடும்பத்தை சீராக நடத்தும் 
கன்னிப்பொறி பெண்களிடம் தலை வணங்கும் 
பெண்களைப் போதைத் தரும் பேதைகளாக மட்டுமே 
பார்த்த ஆண்கள், அவள் படித்து மேதையான போது, 
ஆண் தலைக்கணம், ஒரு கணம் தலைக் கவிழ்ந்தது.
தனது உதிரத்தையே உணவாக குழந்தைக்கு கொடுக்கும் 
பெண்களின் முன், கடவுளுக்கு கூட 
கடைசி இடம் தான் 
உடைகள் பல அணிந்து 
நடைகள் பல பயின்று 
நவநாகரீகம் செய்யும் யுவதிகள் நீங்கள் 
மகளிர், பதுமை, பூவையர், யுவதி, வஞ்சி, கன்னி,என 
பல பெயர்களில் உங்களை  அழைத்தாலும்  
நீங்கள் வெளிப்படுத்தும்  ஒரே செயல் "அன்பு" ஒன்று தான். 
                                         - மோகன் கந்தசாமி 
 
 
No comments:
Post a Comment