கண்ணொளி தந்த கரும வீரர் டாக்டர் வெங்கடசாமி
(Aravind eye hospital founder and activities)
பார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்தியாவின் தென்கோடி கிராமத்தில் பிறந்த வெங்கடசாமி என்ற சிறுவனின் உள்ளத்தில் பதிந்த இந்த அவல நிலை, மருத்துவ உலகில்புகுந்து ஏழை எளிய மக்களுக்கு புத்தொளி காட்டவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
இந்த உலகில் ஒருவர்கூட கண் பார்வை இல்லாமல் இருக்கக்கூடாது' என்பதை ஒரு லட்சியமாக கொண்டு ஓடி ஓடி உழைக்க ஆரம்பித்தார் வெங்கடசாமி. கிராமத்து இளைஞராக, கல்லூரி மாணவராக, ராணுவ மருத்துவராக, அரசு மருத்துவமனையின் லட்சிய மருத்துவராக, இருளில் வாழ்ந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கண்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் புத்தொளி கொடுத்த மக்கள்நல சேவகராக வாழ்ந்து மறைந்த டாக்டர் வெங்கசாமியின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்பது திண்ணம்.
மருத்துவ கல்லூரி சேரும் பொழுது நேர்ந்த Arthritis நோயால், மருத்துவம் பயிலவே முடியாது என்ற நிலையிலும் தனது ஆன்ம பலத்தால் நோயிளிர்ந்து விடு பட்டாலும் அவர் விரும்பிய Gynecology படிக்க கல்லூரி மறுத்து விட்டது. எனவே கண் மருத்துவம் பயின்றார். அந்த காலத்தில் கண் புரை நோயால் நிறைய பேர் பார்வை இழக்க நேரிட்டது. தகுந்த சிகிச்சை கொடுத்தால் நிச்சயம் அவர்களை பார்வை இழப்பதிலிருந்து தடுக்க முடியும்.
ஆனால் அப்பொழுது நம் நாட்டில் கண் மருத்துவர்கள் மிக சொற்ப அளவிலே இருந்தனர். வெங்கடசாமி கண் மருத்துவம் முடித்த பின் மதுரை மருத்துவ கல்லூரியில் வேலை கிடைத்தது. அப்பொழுது ஒரு சிறிய அணியை உருவாக்கி, அவர்கள் தமிழ் நாட்டின் குக்கிராமத்தில் சென்று கண் மருத்துவ முகாம்கள் நடத்தி ஆயிரகணக்கான கண் அறுவை சிகிச்சை நடத்தி பார்வை வரம் அளித்தனர். Arthritis நோயால் பாதிக்கபட்டு கை விரல்கள் சரி வர இயங்காத அதே வெங்கடசாமி தான் லட்ச கணக்கான கண் அறுவை சிகிச்சைகள் செய்தார். அவருக்கு சில தோல் நோய்கள் தொந்தரவு செய்ததால், நிறைய இடங்களில் அவரை தொழு நோயாளி என்று நினைத்து நிறைய பேர் அவரை விரட்டி அடித்தனர். இறுதி வரை திருமணம் செய்யாமல் பிரமச்சரியகவே வாழ்ந்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவி 30 % வசதியான நோயாளிகளிடம் வாங்கிய பணத்தை கொண்டு 70 % நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் கொடுத்தார். வாழ்வின் நோக்கம் அறியாமலே வாழ்ந்து இறந்து கொண்டிருக்கும் நம்மிடையே வாழ்விற்கே ஒரு புது அர்த்தம் கொடுத்தார்.
இப் புத்தகத்தில் என்னை கவர்ந்த சில முக்கிய நிகழ்வுகள்:
1 . "எனது வேலை மூலம் என்னை சிறந்த மனிதனாகவும், இந்த உலகத்தை சிறந்ததாகவும் எப்படி மாற்றுவது" என்று எழுந்த சிந்தனை தான் இன்று என்னை இந்த நிலைக்கு இட்டு சென்றுள்ளது என்று ஒரு இடத்தில குறிப்பிட்டுள்ளார்.
2 . அவர் இறக்கும் வரை ஒரு பைசா கூட அரவிந்த் மருத்துவமனைலிருந்து எடுக்கவே இல்லை.
3 . ஒரு நல்ல தலைமை பண்பாளன், தான் மட்டும் வளராமல், தன்னை சுற்றி நிறைய தலைவர்கள் உருவாக்க முனைப்புடன் இருக்க வேண்டும் என்ற கூற்றுக்கு வெங்கடசாமி ஒரு சிறந்த அடையாளம்.
4. ஒரு மருத்துவர் என்று இல்லாமல், ஒரு சிறந்த நிர்வாகியாக, மற்ற தொழில்கூடங்களில் உள்ள புதுமை செயல்களை எவ்வாறு கண் மருத்துவத்தில் செயல்படுத்துவது என்று வாழ் நாள் முழுவதும் முனைப்புடன் இருந்தார்.
ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நினைத்து பாருங்கள், தனது 58 வயதுக்கு பிறகு தான் இறக்கும் வரை பம்பரம் போல் சுழன்று ஏழை மக்களுக்கு கண்ணொளி தந்த வேங்கடசாமி ன் இடத்தில் நாம் இருந்தால், 58 வயதில் பணியிலிருந்து ஒய்வு பெற்று வீட்டு நாற்காலியில் சுகமாக ஒய்வு எடுத்திருப்போம். ஆனால் இவரோ தோல் வியாதி, முடக்க வியாதி இவற்றை பொருட்படுத்தாமல் உலக மக்களின் நல் வாழ்விற்காக தன்வாழ்வையே அர்பனித்துள்ளார் .
வேங்கடசாமி செய்த காரியங்கள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் இந்த கட்டுரையில் குறிப்பிட முடியாது. நீங்கள் அனைவரும் அவரை பற்றி விகடன் பிரசுரம் வெளியிட்ட "விழி வேள்வி" புத்தகத்தை வாங்கி படித்து உங்கள் வாழ்வையும் மேம்படுத்தி கொள்ளுங்கள். எல்லாம் வல்ல உங்கள் ஆத்ம சக்தி உங்களுக்கு நல் வழி காட்டும். மக்களுக்கு சேவை செய்யும் நல்ல எண்ணம் நம் இதயத்திலும் துளிர் விடட்டும்.
A documentary has been released for Aravind eye hospital's services and its vision. It's very inspiring. View it in the following link.
http://www.snagfilms.com/films/title/infinite_vision
வாழ்த்துகளுடன்
மோகன் கந்தசாமி
Thanks for sharing,worth reading
ReplyDeleteMikka Nanri
DeleteGood Review :-)
ReplyDeleteShared very good and interesting news.. Really worthy..
ReplyDeleteA very inspirational post :)
ReplyDeleteThanks much for sharing :)