Monday, January 28, 2013

மங்கை மலர்கள்


மங்கை நீ சூடும் மலர்களில்
மயங்கி கிடக்கும் தேனீக்கள்.

அவைகள் கூட மறந்து  தவிக்கும்
வாசம்  கொள்வது பூவா இல்லை பூவையரா என்று.

காலையில் பூத்து மாலையில் வாடும் பூக்களுடன்
கடிகாரம் காட்டும் அத்தனை நேரமும் அழகாயிருக்கும்
உன்னை சேர்ப்பது கூட மாண்பில்லாத செயல் தான்.

நீ அவ்வாறு பூத்தால்
நான் எவ்வாறு பார்ப்பேன்?

நின் இமைகள் பேசும் வார்த்தைகள் கொண்டு
வாக்கியம் படைத்தேன்
அங்கவை உன்னை பார்த்தது கூட
தமையன் தன் பாக்கியம் அன்றோ!!!

                                                                                  - மோகன் கந்தசாமி

Wednesday, January 23, 2013

காத்திருப்பு

                                   
நீ நாளை 11 மணிக்கு சந்திக்கலாம் என்று சொல்லி விட்டாய்.

அக்கணம் முதலே கடிகார முள் சத்தம்

என் இதய துடிப்பானது!!!

                                                                    -  மோகன் கந்தசாமி

Sunday, January 20, 2013

இளமைத் தமிழ்


என் செம்மைத்  தமிழ் மொழியே

நீ என்ன அதியமான் கொடுத்த

நெல்லிக்கனியை உண்டு விட்டாயோ

இவ்வளவு  வயதாகியும் இன்னும்

இளமையுடனே இருக்கிறாய்!!! 

                                                                   - மோகன் கந்தசாமி

தமிழ் சொல்லித் தருவோம்


முதல் நாள் பள்ளி செல்லும் உன் குழவிக்கு

சொல்லிக் கொடு அவ்வை கிழவியின்

'அறம் செய விரும்பு'!!!

                                                 - மோகன் கந்தசாமி

Friday, January 18, 2013

கணிப்பொறிக் காதல்


 
என்னைப் போலவே உன் கம்ப்யூட்டர் மௌஸும்

உன் கரம் பிடிக்கக் காத்திருக்கிறது!!!


                                                                -
மோகன் கந்தசாமி

Thursday, January 17, 2013

இதுதான் காதலா?


கண்கள் இரண்டும் உன்னைப் பார்க்க

என்ன என்று இமைகள் கேட்க

இது தான் நம் காதல்

என்றது இதயம்!!!

                     - மோகன் கந்தசாமி

காதலின் வலி


உன்னிடம் பேசிய வார்த்தைகளை விட

உன்னுடன் பேசுவதாக நினைத்து நான்

என்னிடமே பேசிய வார்த்தைகள் தான் அதிகம்!!!

                                                      - மோகன் கந்தசாமி

தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள்


தலையணையில் கண் பொதிக்கும் நேரத்தில்

கணிப்பொறியில் கண் பொதித்தோம்

இரவில் விழிக்கும் ஆந்தை கூட உறங்கியிருக்கும்

நாமோ ஆந்தை போல விழித்திருக்கிறோம்!!!

                                               - மோகன் கந்தசாமி

இசைப் போராட்டம்



இசைக் கருவிகள் இசை மீட்ட மறுத்து விட்டன

இன்று நீ வளையல்கள் அணிந்து வர மறந்ததால்!!! 

                                                       - மோகன் கந்தசாமி

பிறந்ததும் இறந்தேன்


புத்தன் பிறந்ததும், இறந்ததும் ஒரே தேதியில் தானாம்

அவன் என்ன பிரமாதம்

நான் உன்னை பார்த்த ஷனமே 

பிறந்தும் விட்டேன் இறந்தும் விட்டேன்!!!

                              - மோகன் கந்தசாமி

புற்களின் காதல்


புற்களே, உங்களுக்கு சூரியன் மீது என்ன அவ்வளவு காதலா?

அவனைப் பார்க்காததால் இவ்வளவு கண்ணீர் வடித்துள்ளீர்களே!!

அதிகாலையில் புற்களின் மீது பனித்துளிகள்!!!!!
                          
                                                                        - மோகன் கந்தசாமி

Tuesday, January 15, 2013

எதிரி!!!


உன் கண்கள் என்ன உன் உதட்டிற்கு எதிரியா?

உன் உதடுகள் சொல்லும் பொய்களை

உன் கண்களே  காட்டி கொடுத்து விடுகிறதே!!!!

                                                              -  மோகன் கந்தசாமி