மங்கை நீ சூடும் மலர்களில்
மயங்கி கிடக்கும் தேனீக்கள்.
அவைகள் கூட மறந்து தவிக்கும்
வாசம் கொள்வது பூவா இல்லை பூவையரா என்று.
காலையில் பூத்து மாலையில் வாடும் பூக்களுடன்
கடிகாரம் காட்டும் அத்தனை நேரமும் அழகாயிருக்கும்
உன்னை சேர்ப்பது கூட மாண்பில்லாத செயல் தான்.
நீ அவ்வாறு பூத்தால்
நான் எவ்வாறு பார்ப்பேன்?
நின் இமைகள் பேசும் வார்த்தைகள் கொண்டு
வாக்கியம் படைத்தேன்
அங்கவை உன்னை பார்த்தது கூட
தமையன் தன் பாக்கியம் அன்றோ!!!
- மோகன் கந்தசாமி
No comments:
Post a Comment