ஆதி நாட்களிலிருந்து பெண் என்பவள் ஆணுக்கு ஊழியம் செய்யும் அடிமை பொருளாக இருந்து வந்தது, சில தலைமுறைகளாக தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற நன்மக்களின் சீரிய முயற்சியால் இழந்த உரிமைகளை மெல்லப் பெற்று வருகிறார்கள். இருந்த போதிலும், பெண் என்பவள் தன் அனைத்து உரிமைகளையும் பெற்று விட்டனரா என்றால், பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
நான் வாழும் சமுதாயத்தில், நான் கண் கூடாக பார்த்த 'பெண்ணியம்' சார்ந்த உரிமை மறுப்புகளை உங்கள் பார்வைக்காக கீழே குறிப்பிட்டுள்ளேன்.
பெண்ணை அடிமையாகவே பார்த்த ஆண்களின் எண்ணம் தலைமுறை தலைமுறையாக ஜீன்களின் வழியே வந்து இன்னமும் ஆட்சி செய்வதை நாம் காணலாம். ஒரு வீட்டில் ஆண் என்பவன் வெறும் தொழிற் கூடம் மட்டும் சென்று பொருள் ஈட்டுவான். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பெண் மட்டுமே செய்ய வேண்டும். இது அந்த பெண் வேலைக்கு சென்றாலும் சரி, இல்லை செல்ல விட்டாலும் சரி, அது அவர்களுக்கு ஆண்களால் விதிக்கப்பட்ட மறுக்கப்படாத (மறுக்க கூடாத) ஒரு தெய்வீகப் பணி. வீட்டு வேலைகளை சரி சமமாக எடுத்துச் செய்யாத ஆண்கள், பெண் உரிமை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. பொதுவாக ஆண்களை விட பெண்கள் உடல் அளவில் சிறிது பலம் குறைந்தவர்கள், ஆனால் மன அளவில் ஆண்களை விட பெண்கள் பல மடங்கு வலிமை மிக்கவர்கள். பெண் என்பவள் வீட்டு வேலை செய்ய மட்டுமே உபயோகமாக இருப்பாள் என்று நினைக்கும் ஆடவர்கள், நிச்சயம் பேடித் தன்மை பொருந்திய கோழைகளே. இனியாவது ஆண்கள் சமைத்தல், துணி துவைத்தல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டு வேளைகளில் தன் வீட்டுப் பெண்களுக்கு உதவலாம், முடிந்தால் பெண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்த வேலைகளை செய்யலாம். வீட்டு வேலை செய்யும் கணவனை, மனைவி கணவனாக பார்க்க மாட்டாள், கடவுளாகவே வணங்குவாள்.
ஆண் வாரிசுக்கு மட்டுமே சொத்துரிமை உண்டு என்ற காலத்தில், பெரியாரின் முயற்சியால் பெண்களுக்கு கொஞ்சம் சொத்துரிமை கிடைத்து வந்தது. அதென்ன ஆண் மட்டும் அனைத்து சொத்துகளையும் வைத்து கொள்வது, பெண்ணுக்கு ஏதுமில்லை என்று கைவிரிப்பது. மக்கள் சொல்லும் பதில், பெண் என்பவள் அடுத்த வீட்டிற்கு போகிறவள், அவளுக்கு எதற்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும். நிச்சயம் பெண்ணுக்கு சம சொத்துரிமை கிடைக்க நாம் வழிவகை செய்ய வேண்டும். என் அக்காவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன், எனக்கு கிடைக்கும் சொத்தில் சம பாதி என் அக்காவிற்கும் என்று.
கணவன் - மனைவிக்கு குழந்தை பிறந்தால், குழந்தைக்கு தகப்பன் பெயரின் முதல் எழுத்தை initial ஆக வைத்தல் என்பதே நியதி எனக் கூறுவது நிச்சயம் அறிவுள்ள மானிடர்க்கு பொருந்தாது. சமீப காலமாக தந்தை, தாய் இருவரின் பெயர்களின் முதல் எழுத்தை குழந்தைக்கு initial ஆக வைப்பதை நான் பார்க்கிறேன், ஆனால் இதை சட்டமாகவே இயற்ற வேண்டும்.
இன்னுமொரு மிகப்பெரும் சாபக்கேடு , வீட்டில் எந்தவொரு முடிவையும் பெண்ணின் ஆலோசனையோ, ஒப்புதலோ இல்லாமல், ஆண்மகன் தன்னிச்சையாகவே எடுக்கிறான். இது ஆண் பெண்ணை நடத்தும் கீழ்த்தரமான செயல். குடும்பத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிலும் பெண்ணின் பங்கு நிச்சயம் இருக்க வேண்டும்.
பெண்ணிற்கு சம உரிமை கொடுக்கும் தேசத்தில் தான் மும்மாரி மழையும் சரமாரியாக பெய்யும்.
பெண்ணின் வயிற்றில் கருவுண்டோம்
பெண்ணின் ரத்தத்தை பாலாக உண்டோம்
பெண்ணின் அரவணைப்பில் ஆளானோம்
பெண் துணையால் வாழ்க்கையில் வளம் பெற்றோம்
பெண்ணியம் போற்றுவோம் பெண்ணியம் போற்றுவோம்!!!
- மோகன் கந்தசாமி